பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் கொட்டும் மலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கைகளில் குடைகளை பிடித்தபடி விவசாயிகள் பங்கேற்று அதிரடியாக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி கூட்டுறவு பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், எவ்வித நிபந்தனையுமின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த ‘கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கான கூட்டமைப்பு’ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது பலத்த மழை பெய்தபோதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் கொட்டும் மழையிலும் கையில் குடைகளைப் பிடித்தபடி திரளாகப் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற நடைமுறையை ரத்து செய்து, கடன் பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும்.கடந்த 30.04.2025-க்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்துக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன.
கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி விவசாயிகள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் தொகை தொடர்பான தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.