மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..! (முதல் பாகம்)
நில்…கவனி… துவங்கு…! (இரண்டாம் பாகம்)
இந்த தொடர்… உங்கள் வாழ்க்கை முறையில் (Life style) ஏதாவது ஒரு புள்ளியை மாற்றலாம்!
கப்ளிசேட்
மகரந்தமலர் – 1
ரேஷ்மா… காபி போடு!
ஏங்க… ஒரு pizza ஆர்டர் பண்றேன். உங்க கார்டைக் கொடுங்க… இல்லாட்டி கூகுள் pay பண்றீங்களா?
ஏம்மா… இப்ப எதுக்கு தேவையில்லாம pizza?
எனக்குத் தேவை! உங்களுக்குத் தேவை யில்லைன்னா சாப்பிடாதீங்க!
அதுக்காகவா இவ்வளவு பிடிவாதம்?
பிடிவாதமா? எனக்குப் பிடிச்சதை சாப்பிடுவதற்கு கூட உங்ககிட்ட அனுமதி வாங்கணுமா?
அட… அப்படியெல்லாம் இல்லம்மா!
அப்புறம் எதுக்கு இவ்வளவு கேள்வி?
கேள்வி கேட்காம வேற என்ன பண்றது? பாரு ரேஷ்மா… Pizza வாங்குறதுக்கு நூறு, இருநூறு ரூபாய் செலவு பண்றதுக்குப் பதிலா, இருபது ரூபாய்க்குக் கடலை மாவு, இருபது ரூபாய்க்கு எண்ணெய், பத்து ரூபாய்க்கு வாழைக்காய் வாங்கினா போதும்…
ஐம்பது ரூபாய்க்கு பஜ்ஜி சுட்டு, பத்து பேர் சாப்பிடலாம்! எதுக்கு இப்படித் தேவையில்லாம வெட்டிச் செலவு பண்ணணும்?
ரேஷ்மாவின் முகம் சட்டென்று மாறியது. எது வெட்டிச் செலவு?
உங்கம்மாவுக்கு இருமல் வந்துட்டா, நூறு ரூபாய் கொடுத்து இருமல் மருந்து வாங்கிக் கொடுக்கிறீங்க… அது வெட்டிச் செலவு இல்லையா?
அது நோய்க்கு மருந்தும்மா! இது வயித்துக்கு உணவு!
வயித்துக்கு உணவுன்னா, அதுக்காக எதை வேணும்னாலும் வாங்கி சாப்பிடணுமா?
விளம்பரத்தை பார்த்துட்டு ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிடணுமா?
இப்ப ஆர்டர் பண்ணட்டுமா? வேண்டாமா? கேள்வியை முடித்துவிட்டு ரேஷ்மா கணவனையே பார்த்தாள்.
அவன் ஒரு பெருமூச்சு விட்டான். சொல்றதைப் புரிஞ்சுக்க ரேஷ்மா… காசு பெரிசில்லை!
நாம செலவு பண்ற பணத்துக்கு ஏத்த உணவு கிடைக்குதா? அதுதான் என்னுடைய கேள்வி!
Pizza,பர்கர் மாதிரியான உணவுகள்ல என்னென்ன பொருட்கள் சேர்க்கிறாங்கன்னுஉனக்கு தெரியுமா?
மைதா மாவு பயன்படுத்துறாங்கசாஸ்ல என்னென்ன சேர்க்கிறாங்கன்னு தெரியாது.
சீஸ் தரமானதா இருக்கான்னும் தெரியாது. உணவுப் பொருட்களை முறையாகச் சேமித்து வைக்கிறாங்களான்னும் நமக்குத் தெரியாது!
விளம்பரத்துல காட்டுற உணவுக்கும், நம்ம கைக்கு வந்து சேர்ற உணவுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு தெரியுமா?
ரேஷ்மா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் தொடர்ந்தான். நேத்துக்கூட ஒரு சேனல்ல புற்றுநோய் நிபுணர் பேசினாரு.
தெருவோர உணவுகளை வாங்கும்போது சுத்தத்தைக் கவனிக்கணும்.
குறிப்பா, அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய நிறமூட்டிகள், பாதுகாப்பற்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும் உணவுகளை தவிர்க்கணும்னு சொன்னாரு.
பேக்கரி உணவுகள்ல பயன்படுத்துற கிரீம்கள், இனிப்புகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்திலும் உடலுக்கு கேடு தருகிற Chemical ingredients… அவைகளை பயன்படுத்தாத பொருட்களா? தாராளமா வாங்கலாம்…
உணவுக்கு நல்ல வாசனை வரணும்… பார்க்க அழகா இருக்கணும்… நீண்ட நேரம் கெடாம இருக்கணும்…
இதுக்காகச் சில இடங்கள்ல தேவையற்ற Chemical பொருட்களை பயன்படுத்துறாங்க!
ஆனா, அதுக்காக எல்லா உணவுகளும் ஆபத்தானவைன்னு சொல்ல முடியாது.
உணவின் தரம், தயாரிக்கும் முறை, சேமிப்பு, சுகாதாரம் எல்லாமே முக்கியம்!
நாம சாப்பிடுற உணவு நமக்கு ஊட்டச்சத்தைத் தரணும். நோயை விலை கொடுத்து வாங்குற மாதிரி இருக்கக்கூடாது!
அவனுடைய பேச்சில் இப்போது கோபத்தைவிட அக்கறையே அதிகமாக இருந்தது.
ரேஷ்மா… நம்ம குழந்தைகளும், இளைஞர்களும் ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிடுற இந்த உணவுகள்ல என்ன இருக்கு?
எப்படி தயாரிக்கிறாங்க? இதையெல்லாம் கொஞ்சமாவது தெரிஞ்சுக்க வேண்டாமா?
எல்லா நோய்களுக்கும் உணவுதான் காரணம்னு சொல்ல முடியாது.
அதே நேரத்துல, நம்ம உணவுப் பழக்கங்களுக்கும் உடல்நலத்துக்கும் சம்பந்தமே இல்லையென்றும் சொல்ல முடியாது!
குறிப்பாக, புற்றுநோய் மாதிரியான நோய்களைப் பற்றிப் பேசும்போது இன்னும் கவனமாக கேக்கணும்!
Carcinoma… அதாவது, உடலின் மேற்பரப்பு அல்லது உறுப்புகளின் உள்புறத்தைப் போர்த்தியிருக்கும் எபிதீலியல் செல்களிலிருந்து உருவாகும் ஒரு வகைப் புற்றுநோய்!
அது உருவாக என்னென்ன காரணங்கள் இருக்குன்னு தெரியுமா?
அவன் கேட்ட கேள்வி ரேஷ்மாவின் காதுகளில் விழுந்தது.
ஆனால், அவளுடைய மனதில் வேறொரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
இத்தனை நேரம் நான் கேட்டது ஒரு pizza வாங்கலாமா, வேண்டாமாங்கிற கேள்வி!
ஆனா, இவர் எங்கேயோ போயிட்டாரே! அவளுடைய கண்களில் கோபம் கொப்பளித்தது.
Pizza ஆர்டர் செய்வதற்கான ஆசை ஒருபுறம்… கணவனின் அறிவுரையை ஏற்றுக்கொள்ள முடியாத பிடிவாதம் மறுபுறம்…
இரண்டுக்கும் இடையில் அவள் மௌனமாக நின்றாள்.
ஆனால், அந்த வீட்டின் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்தன.
அவை பூக்களைத் தேடிப் பறந்தன. பூக்கள் அவற்றை வரவேற்கக் காத்திருந்தன.
ஆனால்… பூக்களிலிருந்து மகரந்தம் தொலைந்து விட்டால்?
வண்ணத்து பூச்சிகளால் தேனைப் பருக முடியாவிட்டால்? அந்தப் பூக்களுக்கும் என்ன அர்த்தம்?
அந்தப் பறத்தலுக்கும் என்ன அர்த்தம்? உணவு என்பது வெறும் பசியைப் போக்குவதற்கானது மட்டுமல்ல…
அது நம்முடைய உடல்நலத்தோடும், எதிர்கால வாழ்க்கையோடும் தொடர்புடையது!
ஆசைகள் தவறல்ல… ஆனால், ஆசைகளின் பின்னால் இருக்கும் உண்மைகளை அறிந்துகொள்வது அவசியம்!
விளம்பரங்கள் காட்டும் வண்ணங்களுக்குள் வாழ்க்கையின் ஆரோக்கியத்தைத் தொலைத்துவிடக் கூடாது!
Pizza ஆர்டர் செய்தாரா?
வண்ணத்து பூச்சிகள் நாளையும் பறக்கும்..!




You must be logged in to post a comment.