பொய்கை ஊராட்சியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னத்தம்பி நாடாரூர் தங்கம் தொடக்கப்பள்ளியின் மேற்புறம் உள்ள தெருவில், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், பொதுமக்கள் அந்த வழியாகச் செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பொய்கை ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பித்து, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, சாக்கடை கால்வாயை முறையாகச் சீரமைக்கவும், கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.