25 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் இரவு முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை: சாலைகளில் வெள்ளம் போல் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி; பெட்ரோல் பங்க் சேவை பாதிப்பு!

ராமநாதபுரத்தில் இரவு முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை: சாலைகளில் வெள்ளம் போல் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி; பெட்ரோல் பங்க் சேவை பாதிப்பு!

எழுதியவர்: Baker BAker November 25, 2026, 12:21 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இரவு முதல் ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் வடிய வழியின்றித் தேங்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம் நகர் பகுதியான ரோமன்ஜெட்ஸ் பகுதியில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன. தேங்கி நிற்கும் மழைநீர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்ததால் வாகனங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மழைநீரிலேயே தள்ளிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல், ரோமன்சர்ச் பகுதியில் அதிக அளவு மழைநீர் தேங்கியதன் காரணமாக அங்கிருந்த பெட்ரோல் பங்க்கிற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் பெட்ரோல் பங்க்கின் சேவையும் பாதிக்கப்பட்டு, எரிபொருள் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சாலையில் வெள்ளம் போல் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றி, போக்குவரத்து மற்றும் அப்பகுதியின் இயல்பு நிலையைச் சீர்செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!