24 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்து இல்லா தென்காசியை உருவாக்குவோம்!

சாலை விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்து இல்லா தென்காசியை உருவாக்குவோம்!

எழுதியவர்: Abubakker Sithik November 24, 2026, 4:41 pm

தென்காசி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS உத்தரவின்படி, சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவும் அறிவுறுத்தப்பட்டதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக “Don’t Drink and Drive, Wear Seat Belt and Wear Helmet” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன. சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம் என்ற உறுதி மொழியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!