ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மண் அகல் விளக்குகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகள், கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு திருவாடானை பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் ரகங்களில் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான அகல் விளக்குகள் முதல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய விளக்குகள் வரை பலவிதமான மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ.10 முதல் ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.200 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
தீபத் திருநாள் நெருங்கியுள்ளதால், பொதுமக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு வந்து தங்களுக்குத் தேவையான விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் திருவாடானை பகுதிகளில் மண் விளக்குகள் விற்பனை களைகட்டியுள்ளது.
மின்விளக்குகளின் ஒளிக்கு மத்தியில் மண் அகல் விளக்குகளின் பாரம்பரிய ஒளியைப் போற்றும் வகையில், கார்த்திகை தீபத் திருநாளுக்கான கொண்டாட்ட உற்சாகம் திருவாடானை பகுதியில் கலை கட்டியது




You must be logged in to post a comment.