18 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறண்ட பூமியிலும் வண்ணமயமான பசுமை! ராமநாதபுரம் வயல்வெளிகளைப் பார்த்து வியக்கும் மக்கள்!

வறண்ட பூமியிலும் வண்ணமயமான பசுமை! ராமநாதபுரம் வயல்வெளிகளைப் பார்த்து வியக்கும் மக்கள்!

எழுதியவர்: Baker BAker November 17, 2026, 7:57 pm

வானிலிருந்து பார்த்தால் அத்தனையும் பச்சைப் பசேல்… இயற்கை ஓவியம் வரைந்தது போல் திருப்பாலைக்குடி, சம்பை வயல்வெளிகள் – குமுதம் நியூஸ் ட்ரோன் கேமராவில் அசத்தல் காட்சிகள்!

 

 

 

ஒரு பக்கம் பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் வயல்வெளிகள்… மறுபக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையைப் போர்த்திய இயற்கை அழகு! 

 

பார்ப்பவர்களின் கண்களுக்கும் மனதுக்கும் ஒருசேர மகிழ்ச்சியளிக்கும் அற்புதக் காட்சிகள் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன.

 

பருவமழை எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்காவிட்டாலும், விவசாயிகள் தங்களது நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. அவ்வப்போது பெய்த மழையையும், ஊரணி நீரையும் நம்பி உரிய காலத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கினர். விவசாயிகளின் உழைப்புக்குப் பலனாக தற்போது பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன.

 

குறிப்பாக, ராமநாதபுரத்தை அடுத்த திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பரந்து விரிந்த வயல்வெளிகள் பச்சைப் பட்டுக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கின்றன.

 

பொதுவாக வறட்சியின் அடையாளமாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்திலா இத்தனை பசுமை? என்று வியக்கும் அளவுக்கு இயற்கை அழகு கண்களை ஈர்க்கிறது.

 

இந்த அழகிய காட்சிகளைத் தரையிலிருந்து மட்டுமல்லாமல், வானிலிருந்து ட்ரோன் கேமரா மூலம் கழுகுப் பார்வையில் படம்பிடித்து, ராமநாதபுரத்தின் மறுபக்க அழகை உலகிற்கே காட்டியிருக்கிறது குமுதம் நியூஸ்!

 

விவசாயிகளின் வியர்வையில் விளைந்த பசுமை… இயற்கையின் அழகில் மிளிரும் ராமநாதபுரம்… உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி!

 

வறண்ட பூமி என்ற அடையாளத்தைத் தாண்டி, பசுமை பூத்துக் குலுங்கும் ராமநாதபுரம்! 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!