18 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிறிஸ்துமஸ் வருவதற்கு முன்பே ராமநாதபுரத்தில் கமகமக்கும் பிளம் கேக் வாசனை!

கிறிஸ்துமஸ் வருவதற்கு முன்பே ராமநாதபுரத்தில் கமகமக்கும் பிளம் கேக் வாசனை!

எழுதியவர்: Baker BAker November 17, 2026, 7:54 pm

10 டன் கேக் தயாரிக்க மெகா ஏற்பாடு! 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் களத்தில்… ஒயினில் ஊறத் தொடங்கிய உலர் பழக் கலவை!

 

 

 

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது குட்டி குட்டி நட்சத்திரங்களும், வண்ண விளக்குகளும், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும், நாவூறும் பிளம் கேக்கும்தான்! அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளன.

 

ராமநாதபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 14 கிளைகளுடன் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரியின் தொழிற்சாலையில், இந்த ஆண்டு சுமார் 10 டன் பிளம் கேக் தயாரிக்கும் பிரம்மாண்டப் பணி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான பிரத்யேகக் கலவை தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட கேக் கலைஞர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

 

உலர் திராட்சை, முந்திரி, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, ஜிஞ்சர் பீர், ஆரஞ்சு தோல் என விதவிதமான சுவைப்பொருட்களுடன், ஏராளமான பாட்டில்களில் கொண்டுவரப்பட்ட ஒயினையும் சேர்த்து கேக் கலவையைத் தயாரித்தனர். கலைஞர்கள் ஒன்றிணைந்து கலவையைப் பக்குவமாகத் தயாரித்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

 

 

தயாரிக்கப்பட்ட இந்தப் பிரத்யேகக் கலவை சுமார் 30 நாட்கள் பதப்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு முட்டை, மைதா மாவு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு, மணமும் சுவையும் நிறைந்த பிளம் கேக்குகளாக உருவெடுக்க உள்ளன.

 

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் வீடுகள்தோறும் இனிப்பைப் பகிர்ந்து மகிழும் வகையில், இப்போதே தயாரிப்புப் பணிகளில் பேக்கரி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

 

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் வரவில்லை… ஆனால் ராமநாதபுரத்தில் பிளம் கேக் வாசனை மட்டும் இப்போதே பண்டிகையை வரவேற்கத் தொடங்கிவிட்டது!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!