18 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருகிய நெற்பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

கருகிய நெற்பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

எழுதியவர்: Baker BAker November 17, 2026, 7:52 pm

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, காக்கூர் குரூப்பைச் சேர்ந்த கருமல் ஊராட்சி விவசாயிகள், 2025–2026 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.

எங்கள் கருமல் ஊராட்சியில் சுமார் 618 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தோம். ஆனால், போதிய அளவில் மழை பெய்யாததால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வீணாகிவிட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வு செய்து சென்றனர்.

இதன்பின்னர், எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள காக்கூர், புளியங்குடி உள்ளிட்ட மற்ற கிராமங்களுக்குப் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை அரசு தரப்பில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், எங்கள் கருமல் ஊராட்சிப் பகுதி விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அதிகாரிகள் கணக்கீடு செய்ததன் அடிப்படையிலும், நாங்கள் செலுத்திய பிரீமியத் தொகைக்கு ஏற்பவும் உரிய பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!