18 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..

தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..

எழுதியவர்: Askar November 17, 2026, 11:02 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (நவ.14) கிராமுக்கு 120 குறைந்து, ரூ.12,695-க்கும், சவரன் ரூ. 960 குறைந்து, ரூ.1,01,560-க்கும் விற்பனையானது.

இதனிடையே, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 75 குறைந்து, ரூ. 12,540-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து, ரூ. 1,00,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 99,760-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 190-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 7 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,280 குறைந்துள்ளது. சுமார் 320 நாள்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!