16 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-தமிழக அரசின் சூப்பர் அறிவுறுத்தல்!

வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-தமிழக அரசின் சூப்பர் அறிவுறுத்தல்!

எழுதியவர்: Askar November 16, 2026, 5:28 pm

வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-தமிழக அரசின் சூப்பர் அறிவுறுத்தல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்.

1. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. தனிநபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் வெளியிடும் வானிலை கணிப்புகளை அரசின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகளாகக் கருதவோ, வெளியிடவோ கூடாது.

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளிலிருந்து மாறுபட்ட தனிநபர்களின் கணிப்புகளை ஒளிபரப்புவதற்கு அல்லது வெளியிடுவதற்கு முன்பு, அவற்றின் நம்பகத்தன்மையை ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் சரிபார்க்க வேண்டும்.

4. சுயாதீனமான அறிவியல் மதிப்பீடுகள் வெளியிடப்படும்போது, அவற்றின் ஆதாரம் தெளிவாகக் குறிப்பிடப்படுவதுடன், அவை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

5. புயல், கனமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய பரபரப்பான செய்திகள், ஆதாரமற்ற கணிப்புகள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்-தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!