16 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

எழுதியவர்: Askar November 16, 2026, 8:55 am

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக, மூத்த அதிகாரிகளிடம் பெண் ஆட்சியர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் முறையான விசாரணை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தவெக எம்எல்ஏ இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிதாக பேசப்பட்டாலும், இதுவரை தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் சார்ந்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தசூழலில் தான் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவை எவ்வித சமரசமுமின்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பதவி அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டத்தின் முன் பொறுப்பேற்பதில் இருந்து தப்ப முடியாது என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!