மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்: அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்..!
உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்:
முதலமைச்சர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்கு பொறுப்பேற்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாமல், பஞ்ச் டயலாக் பேசி ஆட்சி நடத்தும் இந்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்:
காவல் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழப்புகள் நிகழ்வது கவலையளிக்கிறது. விசாரணைக் கைதிகளாக இருந்தாலும், புகார் அளிக்க வந்தவர்களாக இருந்தாலும் காவல் நிலைய வளாகத்தில் அவர்களின் உயிருக்கு காவல்துறை தான் பொறுப்பு. பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கும் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்:
தவெக ஆட்சியில் மேலும் ஒரு காவல் மரணம். காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகிறதா? அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு யார் பொறுப்பு?




You must be logged in to post a comment.