14 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் அதிரடி ஆய்வு!

பரமக்குடியில் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் அதிரடி ஆய்வு!

எழுதியவர்: Baker BAker November 14, 2026, 4:05 pm

சுமார் 40 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்ற எஸ்.பி. – குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை; காவல் நிலையங்களிலும் திடீர் ஆய்வு!

 

 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல்துறையின் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரி கிரண் பிரசாத் ஐ.பி.எஸ்., பரமக்குடியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

 

பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்ற அவர், அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள், பதிவேடுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பணிகளை விரைந்து முடிக்கவும், ஆவணங்களை முறையாகப் பராமரிக்கவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

 

 

இதனைத் தொடர்ந்து, பரமக்குடி பகுதிகளில் உள்ள சுமார் 40 தீவிர சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையாக, 10-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

அவர்களிடம் குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடாமல் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர்களது குடும்பத்தினரிடமும் எடுத்துரைத்தார்.

 

மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் காவல் நிலைய ஆய்வுடன், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கே சென்று எஸ்.பி. நேரடியாகக் கண்காணிப்பு மேற்கொண்டது பரமக்குடி பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

 

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!