14 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சூரிய மின்சாரம் மூலம் மின் கட்டணச் சுமையைக் குறைக்கலாம்! கீழக்கரையில் விழிப்புணர்வு முகாம்!

சூரிய மின்சாரம் மூலம் மின் கட்டணச் சுமையைக் குறைக்கலாம்! கீழக்கரையில் விழிப்புணர்வு முகாம்!

எழுதியவர்: Baker BAker November 13, 2026, 4:18 pm

வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைக்க அரசு மானியம் – மின்சாரச் சேமிப்பு, குடும்பப் பொருளாதார மேம்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கம்!

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

இதில் மின்வாரிய அலுவலர்கள், வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முறை, திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள், அரசு வழங்கும் மானியச் சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

 

மேலும், வீடுகளில் சூரிய மின்தகடுகள் அமைப்பதன் மூலம் பகல் நேரத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால் வழக்கமான மின்சாரப் பயன்பாடு குறைந்து, மாதந்தோறும் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர் 

 

குறிப்பாக, நீண்டகால அடிப்படையில் குடும்பங்களின் மின்சாரச் செலவைக் கட்டுப்படுத்தி, அந்தப் பணத்தை கல்வி, மருத்துவம், சேமிப்பு உள்ளிட்ட குடும்பத்தின் இதர தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். மேலும், எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கும் இத்திட்டம் பயன்பெறும் என்றனர்

 

மேலும் அரசு வழங்கும் மானிய உதவியைப் பயன்படுத்தி, தகுதியுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றும், சூரிய மின்சாரத்தின் அவசியம், மின்சாரச் சேமிப்பு மற்றும் குடும்பப் பொருளாதார மேம்பாடு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

 

இந்த முகாமில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று, திட்டத்தின் பயன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!