13 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஆரல்வாய்மொழி அருகே கன்றுக் குட்டியை வேட்டையாடிய மர்ம விலங்கு! வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

ஆரல்வாய்மொழி அருகே கன்றுக் குட்டியை வேட்டையாடிய மர்ம விலங்கு! வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

எழுதியவர்: Askar November 13, 2026, 11:03 pm

ஆரல்வாய்மொழி அருகே கன்றுக்குட்டியை வேட்டையாடிய மர்ம விலங்கு! வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள சக்கரகிரி மலைக்குன்று அடிவாரத்தில் அடையாளம் தெரியாத விலங்கின் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

செண்பகராமன்புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த இயேசு அடியான் என்பவருக்குச் சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று மர்ம விலங்கால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளது.

இதனால் அப்பகுதி கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு IAS அவர்களின் உத்தரவுப்படி, உதவி வன பாதுகாவலர் ஸ்ரீ வல்சன், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் ஆகியோர் வனப் பணியாளர்களுடன் சம்பவ இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

கன்றுக்குட்டியை வேட்டையாடியது எந்த வகையான விலங்கு என்பதை கண்டறியும் வகையில் அப்பகுதியில் காணப்பட்ட காலடித்தடங்கள் உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்தனர்.

மேலும், அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய தானியங்கி இரவு நேரப் பார்வை கேமராக்கள் (Camera Trap) பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சக்கரகிரி மலைப்பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பது கேமரா பதிவுகள் மற்றும் கிடைக்கும் தடயங்களின் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!