சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோ: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!
சமூக வலைதளங்களில் (Instagram, Facebook, WhatsApp, YouTube உள்ளிட்டவை) கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது மற்றும் இளைஞர்களைத் தவறான பாதைக்குத்தூண்டுவது ஆகியவை கடுமையான குற்றச் செயல்களாகும்.
திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் மற்றும் தனிப்படை போலீசார் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி ஆயுதச் சட்டம் மற்றும் தொடர்புடைய கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.




You must be logged in to post a comment.