14 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் அதிரடி அறிவுறுத்தல்!

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கு எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் அதிரடி அறிவுறுத்தல்!

எழுதியவர்: Baker BAker November 13, 2026, 4:17 pm

21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது – அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி கடைகளைத் திறக்கவும் தடை!

 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

 

பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில்: சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும், 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் எஸ்.பி. அறிவுறுத்தினார். மேலும், அரசு நிர்ணயித்த நேரங்களில் மட்டுமே மதுபானக் கடைகளைத் திறந்து செயல்பட வேண்டும் என்றும், கடைகளில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும், மதுபானக் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊழியர்கள் செயல்பட வேண்டும். கடைகளுக்கு அருகில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தகராறுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பல்வேறு அறிவுரைகளை வழங்

கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!