இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கடம்பாகுடி பகுதியில், சாலையைக் கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த புள்ளிமானைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை காவல் ஆய்வாளர் வாசிவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் மானுக்கு உடற்கூராய்வு செய்து, பின்னர் அடக்கம் செய்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையைக் கடக்கும் வனவிலங்குகள் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.