கடந்த மாதத்தில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலையால் ஆபரணப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில், சவரன் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு மாதத்தின் 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் அதிகரித்தது. இதனால் விலை தொடர்ந்து உயரும் எனக் கணிக்கப்பட்ட சூழலில், தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை மாற்றங்கள்!
கடந்த 9-ஆம் தேதி கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனையானது. தொடர்ந்து 10-ஆம் தேதி கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.13,210-க்கும், சவரனுக்கு ரூ.360 சரிந்து ரூ.1,05,680-க்கும் விற்கப்பட்டது.
இதனையடுத்து, 11-ஆம் தேதி கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினமான 12-ஆம் தேதி கிராமுக்கு ரூ.200 சரிந்து ஒரு கிராம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனையாகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஐந்து நாட்களின் தங்கம் விலை பட்டியல் (22 கேரட் – ஒரு பவுன்)
12-11-2026: ரூ.1,02,520
11-11-2026: ரூ.1,04,120
10-11-2026: ரூ.1,05,680
09-11-2026: ரூ.1,06,040
08-11-2026: ரூ.1,05,280
கடந்த ஐந்து நாட்களின் வெள்ளி விலை பட்டியல் (ஒரு கிராம்)
12-11-2026: ரூ.200
11-11-2026: ரூ.200
10-11-2026: ரூ.205
09-11-2026: ரூ.205
08-11-2026: ரூ.205




You must be logged in to post a comment.