14 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நாகர்கோவில் பகுதியில் வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்! நவம்பர் 16-ம் தேதி சிறப்பு முகாம்-பொதுமக்களுக்கு அழைப்பு!!

நாகர்கோவில் பகுதியில் வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்! நவம்பர் 16-ம் தேதி சிறப்பு முகாம்-பொதுமக்களுக்கு அழைப்பு!!

எழுதியவர்: Askar November 13, 2026, 11:58 am

நாகர்கோவில் பகுதியில் வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்! நவம்பர் 16-ம் தேதி சிறப்பு முகாம்-பொதுமக்களுக்கு அழைப்பு!!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், நாகர்கோவில் மின் பகிர்மானக் கோட்டம் சார்பில், பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைத்து மின்சாரச் செலவைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.35,000, 2 கிலோவாட் அமைப்புக்கு ரூ.70,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இதற்கான விழிப்புணர்வு முகாம் வரும் நவம்பர் 16-ம் தேதி காலை 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் விநியோகப் பிரிவில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு சூரிய மின்தகடு அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மானிய விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு மின்சாரச் செலவைக் குறைக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!