இனி பத்திரப்பதிவு செய்ய அலுவலகம் செல்லும் சிரமம் குறைகிறது!
வீடு, மனை, நிலம், சொத்து பத்திரங்களை பொதுமக்களே ஆன்லைனில் உருவாக்கும் வகையில் பதிவுத்துறையில் புதிய எளிய நடைமுறை அறிமுகம்!
4 Steps-ல் ஆவணங்களை உருவாக்கலாம்!
இணையதளம்: https://www.tnreginet.gov.in
ஆன்லைனில் செய்யக்கூடிய முக்கிய நடைமுறைகள்:
1,ஆவணத்தின் வகையைத் தேர்வு செய்தல்.
2,விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகளின் விவரங்களை உள்ளீடு செய்தல்.
3,ஆவண விவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்துதல்.
4,கட்டணம் செலுத்தி பதிவு நடைமுறையைத் தொடருதல்.
பத்திர விவரங்களை ஆன்லைனில் உள்ளீடு செய்யலாம். ஆவணங்களை PDF வடிவில் பெறலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு நாளைத் தேர்வு செய்யலாம். OTP மற்றும் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகள் உள்ளன.
இறுதிப் பதிவிற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தேவையான சரிபார்ப்பு மற்றும் கைரேகை, விழித்திரை நடைமுறைகளை முடிக்க வேண்டும்.




You must be logged in to post a comment.