13 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக ‘செழிப்பு’ கம்போஸ்ட் உரம்!

வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக ‘செழிப்பு’ கம்போஸ்ட் உரம்!

எழுதியவர்: Baker BAker November 12, 2026, 8:06 pm

மேட்டுப்பாளையம் நகராட்சி 2-வது வார்டு பாலாஜி நகரில் விழிப்புணர்வு நடவடிக்கை – வீடுகளில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் குடும்பங்களுக்கு ஊக்கம்!

கோவை மாவட்டம்: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பாலாஜி நகர் பகுதியில், வீடுகளிலேயே மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து வரும் குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில், நகராட்சி சார்பில் ‘செழிப்பு’ (Sezhippu) கம்போஸ்ட் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

வீடுகளில் அன்றாடம் உருவாகும் மக்கும் குப்பைகளை வீணாக்காமல், அவற்றை இயற்கை உரமாக மாற்றிப் பயன்படுத்தும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஊக்குவிப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் குப்பைகள் குவிவதைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், தூய்மையான நகரத்தை உருவாக்குவதிலும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பைகளை உரமாகத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும் என்றும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வீட்டுக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றுவோம்; சுற்றுச்சூழலைப் பாதுகாத்து தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!