10 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு..

தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: Askar November 10, 2026, 9:18 pm

தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு..

இன்று 10/11/2026 தேனி அய்னுல் ஹுதா மதரசாவில் தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி மதுரை முஹம்மது ஆரிப் அன்வாரி கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்றது.

பெரும்பாலான உலமாக்கல் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்கெடுத்து தமது வாக்கை செலுத்தினர்.

உற்சாகமாக நடைபெற்ற இந்த ஜமாத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில்; தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் தலைவராக பெரியகுளம் ஜாமிஆ அல்-அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியின் நிறுவனரும் முதல்வருமான, மௌலானா மௌலவி, ஹாஃபிழ் M.M.முகம்மது ஹுசைன் மன்பஈ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளராக, மௌலானா, மௌலவி A.அஹமது இப்ராஹிம் ஃபைஜி (உத்தமபாளையம்)

தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளராக, மௌலானா மௌலவி M.அஹமது பௌஜுத்தீன் யூஸுஃபி (பெரியகுளம்) ஆகியோர் வெற்றி பெற்று பொருப்பேற்றி கொண்டனர்.

இவர்களுக்கு கூடி இருந்த உலமா பெருமக்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!