07 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் 3 ரயில்வே கேட்களில் தண்டவாள பராமரிப்புப் பணி!

மேட்டுப்பாளையத்தில் 3 ரயில்வே கேட்களில் தண்டவாள பராமரிப்புப் பணி!

எழுதியவர்: Baker BAker November 7, 2026, 3:02 pm

குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரப் போக்குவரத்து நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காட்டூர், பவானி ஆற்றுப் பாலம் மற்றும் வினோபாஜி நகர் ஆகிய மூன்று ரயில்வே கேட்களில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வினோபாஜி நகர் ரயில்வே கேட் (LC NO.3): வரும் நவம்பர் 13-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நவம்பர் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

பவானி ஆற்றுப் பாலம் ரயில்வே கேட் (LC NO.2 – NCMS அருகில்): வரும் நவம்பர் 16-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நவம்பர் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காட்டூர் ரயில்வே கேட் (LC NO.1): வரும் நவம்பர் 19-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நவம்பர் 20-ஆம் தேதி காலை 6 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட நாட்கள் மற்றும் நேரங்களில் மூன்று ரயில்வே கேட்கள் வழியாகவும் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எனவே, இப்பகுதிகள் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!