பாவூர்சத்திரம் அருகே தவறவிட்ட 245 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த முதியவருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடையே நேர்மை, மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக பாப்பையா (76) என்ற முதியவர் திகழ்கிறார் என காவல்துறை சார்பில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், அரியப்பபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (68) என்பவர் வாகனத்தில் செல்லும்போது தனது பையை தவறவிட்டுள்ளார். அதில் சுமார் 245 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற மேட்டூரைச் சேர்ந்த பாப்பையா (76) என்பவர் அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பதை அறிந்து, பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தார்.
பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் மூலமாக காணமால் நகை மற்றும் பணம் உரியவர்களை கண்டறிந்து ஒப்படைக்கப்பட்டது. முதியவரின் நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வை காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.