06 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நம்ம மேட்டுப்பாளையம்’ சமூக நலக்குழுவின் 5-ஆம் ஆண்டு அன்பு தீபாவளி விழா – பயனாளிகள் நெகிழ்ச்சி!

நம்ம மேட்டுப்பாளையம்’ சமூக நலக்குழுவின் 5-ஆம் ஆண்டு அன்பு தீபாவளி விழா – பயனாளிகள் நெகிழ்ச்சி!

எழுதியவர்: Baker BAker November 6, 2026, 10:37 pm

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ‘நம்ம மேட்டுப்பாளையம்’ சமூக நலக்குழு சார்பில் 5-ஆம் ஆண்டு ‘அனைவருக்கும் அன்பு தீபாவளி’ விழா சிறப்பாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் ராமப்ப சாலையில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சமூக நலக்குழு ஒருங்கிணைப்பாளர் பாஷா தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் ஏழை, எளியோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் என 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, சட்டைகள் உள்ளிட்ட புத்தாடைகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்களின் பங்களிப்புடன் இச்சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ரூ.500 முதல் ரூ.5,000 வரை தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பலரும் இச்சேவைக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

நலத்திட்ட உதவிகளைப் பெற்ற முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும், தங்களின் ஏழ்மையை உணர்ந்து தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவிய அமைப்பினருக்கும், கொடையாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமான பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் குணசேகரன், சத்யா, காளீஸ்வரன், அப்துல் சமது, நவ்ஷாத், அம்பிகா, கனகமணி, மார்க்கெட் யாசர் அராபத், முகமது தஸ்லிம், அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!