06 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைக்கானல் மலைச்சாலையில் டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை;மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

கொடைக்கானல் மலைச்சாலையில் டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை;மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

எழுதியவர்: Askar November 6, 2026, 9:13 am

கொடைக்கானல் மலைச்சாலையில் டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் உள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை;மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரும் மண்டல போக்குவரத்து அலுவலருமான துர்கா மூர்த்தி,  டிசம்பர் 1 முதல் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் ஆகியவை காட்ரோடு முதல் கொடைக்கானல் செல்லும் சாலை, அய்யம்பாளையம், சித்தரேவு,  தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. தருமத்துப்பட்டி,  பன்றிமலை,  மணலூர், தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, ஒட்டன்சத்திரம் பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை. பழனி – சவரிக்காடு – வடகவுஞ்சி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை, பெரியகுளம் கும்பக்கரை பிரிவு அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை ஆகிய சாலையில் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!