01 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » த.வெ.க. அரசை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

த.வெ.க. அரசை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik November 1, 2026, 1:55 pm

தென்காசியில் த.வெ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விண்ணை தொட்ட விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய குழு தலைவி திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை,  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராசேந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைக் கதிரவன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, நகர்மன்ற தலைவர்கள் மூப்பன் ஹபீபூர் ரஹ்மான் (கடையநல்லூர்), சாதிர் (தென்காசி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், நகரக் கழகச் செயலாளர்கள் அப்பாஸ், இத்தாலியன் பீரப்பா, செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன் மற்றும் தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பகுதி பேரூர் கிளைக் கழக செயலாளர்கள், மகளிர் அணி தொண்டர் அணி நிர்வாகிகள், கழக சார் பணிகளை நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் விண்ணை தொடும் அளவில் ஏறிய விலைவாசி குறித்து புள்ளி விவரமாக, கடந்த முறை வழங்கப்பட்ட அரிசி விலை, தற்போது வாங்கும் அரிசியின் விலை, காய்கறி பருப்பு சர்க்கரை ஆகியவற்றை பொதுமக்களிடையே விளக்கி பேசினர். ஷாக்கடிக்கும் மின்சாரம் குறித்து திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மின் கட்டணமும், தற்போது கட்டி வரும் மின் கட்டண துறையும் ஒப்பிட்டு எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோன்று கடந்த முறை திமுக ஆட்சியில் விலை குறைவாக வாங்கப்பட்ட மின்சாரம், தற்போது 35 ரூபாய் 20 பைசா இப்பொழுது 41 ரூபாய்க்கு விஜயின் அரசாங்கம் வாங்கி பொதுமக்களின் தலையில் சுமத்துகிறது எனவும், தமிழகத்தில் பிறந்த பிள்ளைக்கும் பாதுகாப்பில்லை, முதிர்ந்த கிழவிக்கும் பாதுகாப்பில்லை, பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை, வேலை வாங்கித் தருவதாக வன்கொடுமை, கட்சிப் பதவிக்காக சொந்தக் கட்சி பெண்களையே வன்முறைக்கு உள்ளாக்கும் அவலம் தொடர்கிறது. இந்த ஆட்சியில் ரீல்ஸ் மோகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

த.வெ.க அரசுக்கு எதிரான விலைவாசி உயர்வு குறித்த கண்டன முழக்கம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!