31 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் பசும்பொன் தேவர்.! வைகோ புகழாரம் .!!

தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் பசும்பொன் தேவர்.! வைகோ புகழாரம் .!!

எழுதியவர்: Baker BAker October 30, 2026, 11:35 pm

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெற்று வரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேவர் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“நான் சிறையில் இருந்த நான்கு ஆண்டுகளைத் தவிர்த்து, தொடர்ந்து 50-வது ஆண்டாக பசும்பொன் தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துகிறேன்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலிருந்து ராமேஸ்வரம் கடற்கரை வரை தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் சிறைச்சாலையில் எட்டு ஆண்டுகள் சித்திரவதைகளை அனுபவித்தவர். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் படைக்குத் தளபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர்.

தனக்குச் சொந்தமான நிலங்களைக்கூட ஒடுக்கப்பட்ட மக்களும், தேவேந்திரகுல மக்களும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று வழங்கிய வள்ளல் அவர்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்காகவும் வாழ்ந்தவர். அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல; சாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான தலைவர். அனைத்து சமூக மக்களாலும் போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார்” என்று புகழாரம் சூட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!