30 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூக்கையூரில் மீனவர்கள் போராட்ட எச்சரிக்கை: அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசல் வழங்கக் கோரி மீனவ சங்கங்கள் கூட்டாக மனு!

மூக்கையூரில் மீனவர்கள் போராட்ட எச்சரிக்கை: அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசல் வழங்கக் கோரி மீனவ சங்கங்கள் கூட்டாக மனு!

எழுதியவர்: Baker BAker October 29, 2026, 11:35 pm

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகிலுள்ள மூக்கையூரில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்குள்ளாகவே தாமாக சமாதானம் அடைந்த பின்னும் இதுவரை மீன்பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட மின்வளத்துறை அதிகாரிகளிடம் கூட்டாக மனு அளித்துள்ளனர்.

மேலும் மின்வளத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட்டாக சேர்ந்து போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகிலுள்ள மூக்கையூர் பகுதியில் நாட்டுப்புற மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட சிறு தகராறு மோதலாக மாறியதைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மூன்று படகுகளைப் பறிமுதல் செய்து மீன்பிடிக்கத் தடை விதித்தனர்.

இருப்பினும், இரு தரப்பு மீனவர் சங்க நிர்வாகிகளும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிப் பிரச்சினையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். இந்த நல்லிணக்க முடிவு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்ட போதிலும், இன்று வரை கடலுக்குச் செல்லத் தேவையான அனுமதிச் சீட்டோ அல்லது மானிய விலையில் டீசலோ வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் மீனவர்கள், இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடும் கேள்விக்குறியாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்து இரு சங்கங்களின் நிர்வாகிகளும் இணைந்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் அங்கிருந்த மூத்த அதிகாரிகளிடம் இன்று கூட்டாக மனு அளித்தனர்.

மீனவர்களின் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு உடனடியாக மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், தடையை நீக்கி மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவேளை இந்தக் கோரிக்கைகள் மீறி காலம் தாழ்த்தப்பட்டால், இரு சங்கங்களும் இணைந்து தீவிரமான அடுத்தகட்டப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்று அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!