இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்டக் குழு சார்பில், சங்க நிர்வாகிகளுக்கான ஒருநாள் சிறப்பு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு கணபதியில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் தோழர் கே. மனோகரன் தொடக்கவுரையாற்றிப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாம் நான்கு முக்கிய அமர்வுகளாகவும், ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான குழு விவாதங்களுடனும் நடைபெற்றது
முதல் அமர்வு தோழர் என். ஜாகிர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், என்டிசி அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சி. பத்மநாபன் கலந்துகொண்டு, “சமகால அரசியலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இரண்டாவது அமர்வில்
தோழர் கே. ரத்தினகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், மாநிலத் துணைத் தலைவர் தோழர் எம். சந்திரன் பங்கேற்று, “தொழிற்சங்க ஸ்தாபனம் – நமது கடமைகள்” என்ற தலைப்பில் நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளித்தார்.
மூன்றாவது அமர்வில் தோழர் பி. சத்யா தலைமையில் நடைபெற்ற அமர்வில், மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு, மத்திய அரசின் “நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு” அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
நான்காவது அமர்வில் தோழர் எம். ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இறுதி அமர்வில், மாவட்டப் பொருளாளர் ஆர். வேலுச்சாமி பங்கேற்று, “வரவு செலவு & ஆவணங்கள் பராமரிப்பு” என்ற தலைப்பில் தொழிற்சங்க அமைப்பைச் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நேர்த்தியாகக் கையாள்வது குறித்துப் பேசினார்.
அனைத்து தாலுகாக்களிலும் பயிற்சி வகுப்புகள் தொடரும்: நிகழ்வின் நிறைவாக சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் தொடர்ந்து நடத்தப்படும். இதன் மூலம் உருவாகும் இளம் தலைவர்கள் வருங்காலத் தொழிற்சங்க இயக்கங்களை வலிமையுடன் முன்னெடுத்துச் செல்வார்கள்; மேலும், தற்போதுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் திறம்படப் பணியாற்றி களப்போராட்டங்களை முன்னெடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் முழு நேரமும் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயனடைந்தனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சங்கக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும் இந்த வகுப்புகள் பேருதவியாக அமைந்ததாகப் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.





You must be logged in to post a comment.