செங்கோட்டை பகுதியில் இன்ஸ்டாகிராமில் பிறரை அச்சுறுத்தும் விதமாக பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் ஜாதி மத பூசல்களை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மற்றும் பிறரை அச்சுறுத்தும் வகையில் பதிவிடும் நபர்கள் மீது மாவட்ட எஸ்.பி அசோக்குமார் அறிவுறுத்தலின் படி காவல் துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், செங்கோட்டை பகுதியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறரை அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்ட செங்கோட்டை சேர்ந்த சக்தி பிரபாகரன் @ அகமது காலித் (வயது 26) என்ற இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இது போன்று ரீல்ஸ் மோகத்தில் பிறரை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்கள், வசனங்கள் அல்லது ஜாதி மற்றும் மதப் பிரச்சினை ஏற்படுத்தும் விதமான பதிவுகள் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.