தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் ஆவுடையானூர் பஸ் ஸ்டாப் முதல் மார்கெட் செல்லும் சாலை வரை சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் சாக்கடை கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் செல்லும் அவலம் தொடர்கிறது.
சாலையை பயன்படுத்தும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இப்பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் அகற்றப்பட வேண்டும். கழிவு நீர் மழைநீரோடு கலந்து சாலையில் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.