அரபி பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளைத் துரத்தும் நாய்கள்; சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் –
ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி ஜிம்ஆ பள்ளிவாசல் அருகே, பெண்கள் அரபி பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளை தெரு நாய்கள் துரத்தும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளை தெரு நாய்கள் துரத்தும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் மாணவிகள் மட்டுமின்றி, அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெரு நாய்களை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நிலைமை நீடிப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறையினர் மூலம் நாய்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்த பிறகுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பாலைக்குடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.