25 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..

எழுதியவர்: Abubakker Sithik October 25, 2026, 12:05 pm

“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துமனையில் தொடங்கி வைத்தார்.

வலுவான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் திறமையான மருத்துவப் பணியாளர்களின் மூலம், தமிழ்நாட்டில் தாய் மற்றும் சேய் நலச் சேவைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. தாய்-சேய் நலத்திற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் வகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, அவசரகால மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து ஆதரவு, மகப்பேறு தயார்நிலை மற்றும் பயனாளிகளை டிஜிட்டல் முறையில் கண்காணித்தல், இலவச பிரசவம் மற்றும் பிறந்த குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். அவற்றில் சுமார் 4.20 இலட்டும் பிரசவங்கள் (53 விழுக்காடு) அரசு மருத்துவமனையில் நடைபெறுகின்றன. மேலும், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு -6 (National Family Health Survey-6) தரவின்படி, தமிழ்நாட்டில் 99.9 விழுக்காடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

இவற்றில் 90% பிரசவங்கள் 130 அரசு மருத்துமனைகளில் பிரத்திமயகமாக உருவாக்கப்பட்டுள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் மையங்களில் (CEMONC) நிகழ்கிறது. அரசு மருத்துவமனைகள் மூலம் பாதுகாப்பான பிரசவ சேவைகள் மிகக் குறைந்த செலவில் வழங்கப்படுவதுடன், மக்களின் மருத்துவச் செலவினச் சுமையையும் வெகுவாகக் குறைகிறது.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெற்றித் தமிழகம் தொலை நோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல். அரசு மருத்துமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு இந்த ஆண்டு 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 28.09.2026 முதல் 23.10.2026 வரை 1533 குழந்தைகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி.கபிலா ஸ்ரீ தெரிவித்ததாவது: எனக்கு தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி. நான் தென்காசி அரசு மருத்துவமனையில் தான் பிரசவத்திற்காக வந்தேன், இங்கு நன்றாக கவனித்து கொண்டார்கள். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப்போல் நிறைய பேருக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அண்ணனுக்கு நன்றி.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி திருமதி.ராஜலெட்சுமி தெரிவித்ததாவது: எனக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்தேன். கடந்த 16ஆம் தேதி எனக்கு பிரசவம் நடந்தது. நன்றாக கவனித்து கொண்டார்கள். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அண்ணன் தங்க மோதிரம் வழங்கியுள்ளார். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அண்ணனுக்கு நன்றி.

தொகுப்பு: சே.ரா.நவீன் பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!