தென்காசி மாவட்டம், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் / தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், 23.10.2026 இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள புற நோயாளிகள் பிரிவு சமுதாய நல நிலையத்தினையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் இயங்கும் விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




தொடர்ந்து, புளியங்குடி நகராட்சி பசுமை வளாகத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 2025-26ன் கீழ் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
பின்னர், புளியங்குடி நகராட்சி பசுமை வளாகத்தில் உள்ள தெருநாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் தெருநாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினையும், வார்டு எண்:1, வடக்கு ரத வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தினையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் வட்டம் புளியங்குடியில் பொதுப் பணித்துறை நீர் வள ஆதாரம் கட்டுப்பாட்டில் உள்ள இலந்தைக்குளம் குளத்தின் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டார்.
மேலும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினை பார்வையிட்டு தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற்ற குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
தொடர்ந்து, சங்கரன்கோவில் நகராட்சி தூய்மை இந்தியா திட்டம் 2.0- 2024-2025ன் கீழ் திருவேங்கடம் கழுகுமலை இணைப்பு சாலையில் 3MLD கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் I&D அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருவதை பார்வையிட்டார்.
பின்னர், சங்கரன்கோவிலில் தாட்கோ பொறியியல் துறை மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் சமூக நீதி விடுதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சங்கரன்கோவில், சுரண்டை சாலையில் பொதுப்பணி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓடையினை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.