22 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலைப் பணியை விரைந்து தொடங்காவிட்டால் போராட்டம்! பாசிப்பட்டினம் கிராம மக்கள் எச்சரிக்கை!

சாலைப் பணியை விரைந்து தொடங்காவிட்டால் போராட்டம்! பாசிப்பட்டினம் கிராம மக்கள் எச்சரிக்கை!

எழுதியவர்: Baker BAker October 22, 2026, 11:58 pm

ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாகியும் பணி தொடங்கவில்லை – பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் பொதுமக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கலியனகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பாசிப்பட்டினம் கிராமத்திற்குச் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை இணைப்புச் சாலை பல ஆண்டுகளாகப் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து, புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, பணிக்காக ஜல்லிக் கற்களும் கொட்டப்பட்டுள்ளன. ஆனால், பல நாட்களாகியும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சாலையில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் வர முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மருத்துவ அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்குள் வர முடியாத சூழல் இருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். டெண்டர் விடப்பட்டும் சாலைப் பணி தொடங்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு சாலைப் பணியைத் தாமதமின்றித் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பாசிப்பட்டினம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!