ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மணிராஜ் மற்றும் ராமராஜ், தங்களது மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமையைப் பத்திரமாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
இருவரும் வழக்கம்போல் நேற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தபோது, ஆழமான கடற்பகுதியில் அவர்களது வலையில் அரிய வகை ஆமை ஒன்று சிக்கியது. இதையடுத்து, ஆமைக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாத வகையில் கவனமாக அதை வலையிலிருந்து வெளியே எடுத்தனர்.
பின்னர், அதன் உடலில் சிக்கியிருந்த வலைகளை அகற்றி, ஆமையைப் பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர். கடல்வாழ் உயிரினத்தின் உயிரைக் காப்பாற்றிய மீனவர்களின் இந்த மனிதாபிமானச் செயல் அப்பகுதி மக்களிடமும் இயற்கை ஆர்வலர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மீனவர்களின் இந்தச் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.