கொட்டிய கனமழை; வயல்களில் தேங்கிய தண்ணீர்! 27 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் – மழை கைகொடுக்குமா மகசூல் பெருகுமா என எதிர்பார்ப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாடானை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் களை எடுப்பது, மருந்து தெளிப்பது, நாற்று நடுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தொடர்ந்து பெய்து கைகொடுத்தால் நெல் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மழைநீர் தேங்குவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய வடிகால் வசதிகளை உறுதி செய்வதும், தேவையான வேளாண் ஆலோசனைகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்குவதும் அவசியமாக உள்ளது.
எனவே திருவாடானை விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேளாண்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.