22 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு அலுவலகங்கள் முன் குளம்போல் தேங்கிய மழைநீர்!

அரசு அலுவலகங்கள் முன் குளம்போல் தேங்கிய மழைநீர்!

எழுதியவர்: Baker BAker October 22, 2026, 11:17 pm

திருவாடானையில் சுகாதாரச் சீர்கேடு – டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம்; அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் சார்நிலைக் கருவூலம் மற்றும் நில அளவையர் அலுவலகங்கள் முன்பு, நேற்று இரவு பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் தேங்கியுள்ள தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தேங்கிய மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் முன்பே இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதுடன், மழைநீர் மீண்டும் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!