17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் நவீன ஆயுதங்கள் கண்காட்சி!

ராமநாதபுரத்தில் நவீன ஆயுதங்கள் கண்காட்சி!

எழுதியவர்: Baker BAker October 17, 2026, 7:09 pm

காவல்துறை துணைத்தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்; மாணவர்களுக்கு எஸ்.பி. சந்தீஷ் விளக்கம்

 

காவலர் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியின்போது பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

 

இந்தக் கண்காட்சியை ராமநாதபுரம்-சிவகங்கை சரக காவல்துறை துணைத்தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், காவல்துறையினர் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

 

கண்காட்சியில், காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், மிஷின் கன், ரிவால்வர், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

 

மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் காவல்துறையின் மோப்ப நாய்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்தக் கண்காட்சியில் காவல்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆயுதங்கள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!