நவம்பர் 1 முதல் அழைப்பவர் பெயர் டிஸ்ப்ளேவில் தெரிவது கட்டாயம் – டிராய் அதிரடி உத்தரவு..
ஸ்பேம் மற்றும் போலி அழைப்புகளை தடுக்க, வரும் நவம்பர் 1 முதல் செல்போனில் அழைப்பவரின் பெயர் கட்டாயம் டிஸ்ப்ளேவில் தெரிய வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு.
இதன்படி, உங்கள் போனில் நம்பர் சேவ் செய்யப்படாவிட்டாலும், அழைப்பவரின் KYC ஆவணத்தில் உள்ள உண்மையான பெயர் திரையில் தெரியும். Truecaller போன்ற செயலிகளை நம்ப வேண்டிய அவசியம் இருக்காது.
ஸ்பேம் அழைப்புகள், மோசடிகள் குறித்த புகார்கள் அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.