16 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

எழுதியவர்: Baker BAker October 16, 2026, 10:10 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

 

அதன்படி, கடந்த 13ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி, 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்முகாமின் மூலம் நகராட்சியின் 33 வார்டுகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

தெருநாய்களிடையே ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!