17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் பிரபல தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்..

தென்காசியில் பிரபல தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்..

எழுதியவர்: Abubakker Sithik October 17, 2026, 5:50 pm

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள பிரபல தேநீர் கடைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரிந்த ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இத்தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தனியார் தேநீர் கடைக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்று சேர்ந்து கடை ஊழியரைத் தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!