17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..

எழுதியவர்: Abubakker Sithik October 15, 2026, 5:01 pm

வடகிழக்கு பருவமழையில் இருந்து தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாப்பது மற்றும் மேற்கொள்ளக் கூடிய முன் எச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தகவல்..

வடகிழக்கு பருவ மழையிலிருந்து தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாப்பது மேற்கொள்ளக்கூடிய முன் எச்சரிக்கை தொடர்பாக விவசாயிகளுக்கு தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் மு.ஜெஸிமா பானு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்னை பயிரில் உரிய நேரத்தில் தேங்காய் மற்றும் இளநீர் அறுவடை செய்வதன் மூலம் காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம்.

மேலும் மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய மட்டைகடை வெட்டி அகற்றுவது மூலம் மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம்.

மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த நோய் தாக்கிய இலைகள் மற்றும் காயற்ற மரக்கிளைகளை அகற்றி கவாத்து செய்து போதிய காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

வாழை பயிரில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்துதல் வேண்டும். வாழைத்தார்களை முழுமையாக மூடி வைத்தல் மூலம் சேதத்தை தவிர்க்கலாம்.

காய்கறிகளுக்கு உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்துவதன் மூலம் சேதத்தை தவிர்க்கலாம். தக்காளி, கத்தரி, வெங்காயம், மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிர்களுக்கு வேர்ப்பகுதியில் மழை நீர் தேங்காமல் வடிகால் வசதியை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் போன்றபூஞ்சான உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகளை தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்ந்து போன இலைகளை அகற்றி விட வேண்டும்.

பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில்கள் சேதமடையாமல் தடுக்க இணைப்பு கம்பிகள் பலத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் குடிலின் கதவு வழியே காற்று உட்புகா வண்ணம் நன்றாகமூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!