20 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் மழைச் சாரல்… விவசாயிகள் முகத்தில் மலர்ந்த புன்னகை!

திருவாடானையில் மழைச் சாரல்… விவசாயிகள் முகத்தில் மலர்ந்த புன்னகை!

எழுதியவர்: Baker BAker September 20, 2026, 5:45 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் கொளுத்திய வெயிலுக்கு விடை கொடுத்து, கருமேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் திருவாடானை பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளின் முகத்தில் இந்த மழை மகிழ்ச்சியை மலரச் செய்துள்ளது.

திருவாடானை தாலுகாவில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், போதிய மழைக்காக பயிர்கள் காத்திருந்தன. இந்நிலையில், இன்று பெய்த கனமழை விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென இடி, மின்னலுடன் கொட்டிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

சாலைகள், வயல்வெளிகள் என எங்கு பார்த்தாலும் மழையின் தாக்கம் தென்பட்ட நிலையில், மழைத்துளிகளை எதிர்பார்த்து காத்திருந்த நெற்பயிர்களுக்கு இந்த மழை புத்துணர்வை அளித்துள்ளது.

விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏற்ற நேரத்தில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென பெய்த இந்த மழை, தொடர்ந்து மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் தவித்த பொதுமக்களும் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!