15 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அன்னதானம் – தொடங்கி வைத்த மருத்துவர் மலையரசு .!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அன்னதானம் – தொடங்கி வைத்த மருத்துவர் மலையரசு .!

எழுதியவர்: Baker BAker September 15, 2026, 5:08 pm

ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் தங்கப்பா நகர் பகுதி இளைஞர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில தினங்களாக சிங்கச் சாரட் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

 

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை மருத்துவர் மலையரசு தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

விழா ஏற்பாடுகளை காட்டு பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் தங்கப்பா நகர் பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!