14 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.!

வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.!

எழுதியவர்: Baker BAker September 14, 2026, 1:29 pm

ராமநாதபுரம்: வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் அருளொளி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஸ்ரீ அருளொளி விநாயகருக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அருளொளி மன்றம் சார்பில் கூட்டு வழிபாடு மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் ஜோதி பாடல், விநாயகர் துதி, மந்திர உச்சரிப்பு, மங்களம் பாடல் உள்ளிட்டவை பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் அருளொளி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!