13 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியநாயக்கன்பாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சார இயக்கம்.!

பெரியநாயக்கன்பாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சார இயக்கம்.!

எழுதியவர்: Baker BAker September 13, 2026, 7:32 am

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி அமைப்பைச் சேர்ந்த உதயகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் நவ. சிவராஜன், ஐஎன்டியுசி மோகன்ராஜ், ஏஐசிசிடியு நடராஜன், எம்எல்எப் ஷாஜஹான், உழைக்கும் மக்கள் மாமன்றம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று, மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து ஏஐடியுசி மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர். சுரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ஏஐடியுசி உமேஷ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!